கடற்கரைப் பகுதியில் பதுக்கிய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குமரி மாவட்டம், ராமன்துறை கடற்கரைப் பகுதியில் பதுக்கி வைத்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,200 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்டம், ராமன்துறை கடற்கரைப் பகுதியில் பதுக்கி வைத்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,200 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வருவாய்த் துறையின் பறக்கும்படை தனி வட்டாட்சியர் சி. ராஜசேகர் தலைமையில் தனித் துணை வட்டாட்சியர் கே. முருகன், தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஓட்டுநர் டேவிட் ஆகியோர் அடங்கிய குழுவினர் ராமன்துறை பகுதியில் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கடற்கரைப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சிறுசிறு மூட்டைகள் இருந்தது தெரிந்தது. அவற்றை சோதனை செய்ததில் அங்கு 1,200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புக்காடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com