புத்தக வாசிப்பு பழக்கம் மாணவர்களை நல்வழிப்படுத்தும்'

 புத்தக வாசிக்கும் பழக்கம் மாணவர்களை நல்வழிப்படுத்தும் என்றார் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம்.


 புத்தக வாசிக்கும் பழக்கம் மாணவர்களை நல்வழிப்படுத்தும் என்றார் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம்.
கல்வி நிறுவனங்கள், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர் சங்கம் ஆகியன கன்னியாகுமரி மாவட்ட  நிர்வாகத்துடன் இணைந்து நடத்தும் 3 ஆவது புத்தகக் கண்காட்சி நாகர்கோவிலில் 10 நாள்கள் நடைபெறுகிறது. 
வெள்ளிக்கிழமை தொடங்கிய இக்கண்காட்சியை தொடங்கி வைத்து தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். 
தளவாய்சுந்தரம் பேசியது: மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. சிறு வயதிலேயே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். புத்தகம் வாசிப்பதால் மாணவர்களிடையே நன்நெறிகள் மேம்படும்.  மாணவர்கள் புத்தகக் கண்காட்சியை பார்வையிடுவதோடு, புத்தகங்களை வாங்கி படிப்பதன் மூஸம் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தகப் பிரியர்கள் அதிகம் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. முக்கியமான பதிப்பகங்கள், பிரபலமான எழுத்தாளர்களின் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் பயன்படும் என்றார் அவர்.
மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ரேவதி, சார் ஆட்சியர்கள் பவன்குமார் க. கிரியப்பவனர் (நாகர்கோவில்),  ஷரண்யாஅரி
(பத்மநாபபுரம்),  உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரதிக் தயாள்,  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா. சுகன்யா, உதவி ஆணையர் ஏ.எஸ்.அபுல் காசிம், ஆவின் தலைவர் எஸ்.ஏ. அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் டி.ஜான்தங்கம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.வைரவன், செயலர் 
ஏ.ஆர்.வெங்கடாசலம், எழுத்தாளர்கள் பொன்னீலன்,  குளச்சல் மு.யூசுப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com