நடனக் கலைஞர் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே திருமண வீட்டில் ஏற்பட்ட தகராறில் நடனக் கலைஞரை கொலை செய்த வழக்கில் சகோதரர்களுக்கு சனிக்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே திருமண வீட்டில் ஏற்பட்ட தகராறில் நடனக் கலைஞரை கொலை செய்த வழக்கில் சகோதரர்களுக்கு சனிக்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம்,  மார்த்தாண்டம் அருகே மேல்புறம் மடிச்சல் குளத்துவிளைவீடு பகுதியைச் சேர்ந்தவர் சிந்து மோன் (23). ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தொழிலாளி. இவர், 2009 இல் நவ. 11 ஆம் தேதி மடிச்சலில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டார்.
இத்திருமண நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் ஜஸ்டின் ( 42), ஆல்வின்( 40) ஆகியோரும் கலந்து கொண்டனர். திருமண நிகழ்வில் சாப்பாடு பரிமாறுவதில் சிந்துமோனுக்கும், ஜஸ்டின், ஆல்வின் ஆகியோரிடையேயும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்றோர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.
இதனிடையே, மடிச்சல் பகுதியில் நின்று கொண்டிருந்த சிந்துமோனை, ஜஸ்டின் மற்றும் ஆல்வின் இருவரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தனராம். இதுதொடர்பாக, களியக்காவிளை போலீஸார்  வழக்குப் பதிந்து ஜஸ்டின், ஆல்வின் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
இவ்வழக்கை, விசாரித்த நாகர்கோவில் கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ.அப்துல்காதர், குற்றவாளிகள் ஆல்வின் மற்றும் ஜஸ்டின் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சனிக்கிழமை தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட  மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com