நாளை சுதந்திர தினம்: குமரியில் ஏற்பாடுகள் தீவிரம்: கடற்கரை, ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

நாடு முழுவதும் சுதந்திர தினம் வியாழக்கிழமை (ஆக.15) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில்

நாடு முழுவதும் சுதந்திர தினம் வியாழக்கிழமை (ஆக.15) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்து, காலை 9.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.  பள்ளி மாணவ- மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தியாகிகள், வீர தீர செயல்கள் செய்தவர்கள் கெளரவிக்கப்படவுள்ளனர்.
இதையொட்டி, மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள 48 கடலோரக் கிராமங்களில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோரக் காவல் படையினரும் கண்காணிப்புப் பணி மேற்கொண்டுள்ளனர். குமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில்,  கன்னியாகுமரி பகுதியில் உள்ள  தங்கும் விடுதிகளிலும்,   நாகர்கோவில் கோட்டாறு ரயில் நிலையத்திலும் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். கன்னியாகுமரி அதிவிரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களில் பயணிகளின் உடைமைகளை போலீஸார் பரிசோதித்தனர்.
கலைநிகழ்ச்சி ஒத்திகை: சுதந்திர தின விழாவில் இடம்பெறும் கலைநிகழ்ச்சிக்கான ஒத்திகையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com