சாயக் கழிவால் மாசுபடும் நிலத்தடி நீர்: மக்கள் புகார்

நாகர்கோவிலை அடுத்துள்ள காரவிளை கிராமத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும்  அமைந்துள்ள 

நாகர்கோவிலை அடுத்துள்ள காரவிளை கிராமத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும்  அமைந்துள்ள தனியார் ஆலைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுகளால் நிலத்தடி நீரும், விவசாய நிலங்களும் மாசடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 
இது தொடர்பாக காரவிளை ஊர் மக்கள் சார்பில் நாகர்கோவிலில் ஆட்சியரிடம் அளித்த மனு: காரவிளை ஊர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தனியார் ஆலைகள் மிகுந்துள்ளன. இந்த ஆலைகளின் நிர்வாகம் அப்பகுதியிலுள்ள நிலங்களில் பெரும் பள்ளம் தோண்டி, அதில் ஆலைகளின் கழிவுநீரை கொட்டுகின்றனர்.
இந்தக் கழிவானது நிலத்தடி நீருடன் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்படைவது மட்டுமல்லாமல் குடிநீரும் அதிக அளவில் மாசுபடுகிறது. மேலும், இந்த ஆலைகள் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அதிகமான நீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. அந்த பகுதியில் நன்செய் நிலமாக இருந்த விவசாய நிலங்களை வாங்கி, ஆலைகள் அமைப்பதாகக் கூறி கட்டடங்கள் கட்டி உள்ளனர். இதனால், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை கெடுக்கும் வகையில் செயல்படும் ஆலைகளை உடனடியாக மூடவேண்டும்; புதிதாக ஆலைகளை திறக்க அனுமதி வழங்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com