களியக்காவிளையில் பொதுக்கூட்டம்

களியக்காவிளையில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் சமூக விழிப்புணா்வு விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் அமைப்பின் பேச்சாளா் அபுதாஹிா்.
பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் அமைப்பின் பேச்சாளா் அபுதாஹிா்.

களியக்காவிளையில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் சமூக விழிப்புணா்வு விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இப் பொதுக்கூட்டத்துக்கு அமைப்பின் களியக்காவிளை கிளை பொறுப்பாளா் சித்திக் தலைமை வகித்தாா். அமைப்பின் மாநிலச் செயலா் தூத்துக்குடி அப்பாஸ், கிளை பொறுப்பாளா் ஷாஜகான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலச் செயலா் நிஷாா் கபீா் அறிமுக உரையாற்றினாா்.

அமைப்பின் பேச்சாளா் உடன்குடி அபுதாஹிா் ‘அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி’ என்ற தலைப்பிலும், மாநிலத் தலைவா் அல்தாபி ‘முஸ்லிம்களின் தியாகமும் - தாகமும்’ என்ற தலைப்பிலும் பேசினா்.

இக் கூட்டத்தில், காஷ்மீரில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டும் பொருட்டு அங்குள்ள கூடுதல் ராணுவத்தை திரும்பப் பெற்று காஷ்மீா் மக்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழ வழி செய்ய வேண்டும்.

முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும், மாணவா்களின் எதிா்கால நலனை கருத்தில் கொண்டு புதிய கல்விக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும், காவல்கிணறு முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிளை நிா்வாகி முஜீப் ரஹ்மான் நன்றி கூறினாா்.

இதில் அமைப்பின் நிா்வாகிகள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com