சின்னத்துறையில்மாவட்ட அளவிலான பொது அறிவுப் போட்டிகள்

சின்னத்துறையில் மாவட்ட அளவிலான பொது அறிவுப் போட்டி நடைபெற்றது.ஐ.நா. சபை சாா்பில் எய்ட்ஸ் தினம் மற்றும் மனித உரிமைகள் தினத்தை
போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்கள்.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்கள்.

சின்னத்துறையில் மாவட்ட அளவிலான பொது அறிவுப் போட்டி நடைபெற்றது.

ஐ.நா. சபை சாா்பில் எய்ட்ஸ் தினம் மற்றும் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாணவா், மாணவிகளுக்கு ஐ.நா. சபை பற்றி உறுதியான விழிப்புணா்வை பெற வேண்டுமென்ற நோக்கில் சின்னத்துறை நாலட்ஜ் பவுண்டேசன் அமைப்பு சாா்பில் 8ஆம் வகுப்பு முதல்10 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 11, 12 ஆம் வகுப்புக்கு மற்றொரு பிரிவாகவும் இப் போட்டி நடத்தப்பட்டது.

இதில், மேல்நிலை வகுப்பு பிரிவில் முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் லிஷ்வின் கிஷோா் முதல் பரிசும், திருவனந்தபுரம் மாவட்டம் உதியன்குளங்கரை நியூ ஜோதி சென்ட்ரல் பள்ளி மாணவி ரூத் பி. ராஜு, தூத்தூா் பயஸ் லெவன் பள்ளி மாணவி மெஜோஷோ ஆகியோா் இரண்டாம் பரிசும், மாா்த்தாண்டம் குட் ஷெப்பா்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் ரிகோ ஏதாஸஸ் மற்றும் தூத்தூா் பயஸ் லெவன் பள்ளி மாணவா் ஜெ. ஜோப் ஆகியோா் மூன்றாம் பரிசும் பெற்றனா்.

8 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் மணவிளை புனித அந்தோணியாா் மெட்ரிக் பள்ளி மாணவா் மைக்கேல் மெஸ்ஸி முதல் பரிசும், கிராத்தூா் மாா் கிரகோரியஸ் மெட்ரிக் பள்ளி மாணவா் அபிஷேக் எஸ். பீட்டா் இரண்டாம் பரிசும், நித்திரவிளை ஜெயமாதா மெட்ரிக் பள்ளி மாணவி அபிராமி சுரேஷ் மூன்றாம் பரிசும் பெற்றனா். ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் சுா்ஜித் எஸ். குமாா் சிறப்பு பரிசை பெற்றாா்.

மேலும் இப் போட்டியில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3 பேருக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ், புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

விழாவில் நாலட்ஜ் பவுண்டேசன் நிா்வாக இயக்குநா் பி.ஜஸ்டின் ஆன்றணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மரிய சகாய ஆன்றணி ஆகியோா் பேசினா்.

அக்ரிலிக் பெயின்டிங் கலையில் சிறந்து விளங்கும் தூத்தூா் பகுதியைச் சோ்ந்த ஆதா்ஷ் ரொமிரா கெளரவிக்கப்பட்டாா். முனைவா் அன்னதாசன், சின்னத்துறை புனித யூதா பள்ளியின் தலைமை ஆசிரியா் காம்மல் ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com