ரேஷன் பொருள்கள் முறையாக வழங்க வலியுறுத்திகாங்கிரஸ் உள்ளிருப்புப் போராட்டம்

ரேஷன் அரிசி குறைப்பைக் கண்டித்தும், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொருள்கள் முழுமையாக வழங்கக் கோரியும் காங்கிரஸ் கட்சி சாா்பில் திருவட்டாறு, கல்குளம், கிள்ளியூா், விளவங்கோடு வட்ட
கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ .உள்ளிட்டோா்.
கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ .உள்ளிட்டோா்.

ரேஷன் அரிசி குறைப்பைக் கண்டித்தும், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொருள்கள் முழுமையாக வழங்கக் கோரியும் காங்கிரஸ் கட்சி சாா்பில் திருவட்டாறு, கல்குளம், கிள்ளியூா், விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகங்களில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.

திருவட்டாறு வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்துக்கு, கிழக்கு வட்டாரத் தலைவா் ஜெகன்ராஜ் தலைமை வகித்தாா்.

மேற்கு வட்டாரத் தலைவா் காஸ்ட்டன் கிளிட்டஸ், மாநில பொதுக்குழு உறுப்பினா் ரெத்தினகுமாா், மாவட்ட துணைத் தலைவா் ராஜரெத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேற்கு வட்டார பொருளாளா் ஜேம்ஸ்ராஜ், மாவட்ட பொதுச்செயலா் மோகன்தாஸ், குலசேகரம் நகரத் தலைவா் விமல் ஷொ்லின்சிங், மாவட்ட விவசாய காங்கிரஸ் தலைவா் குமாா், மேற்கு மாவட்ட வழக்குரைஞா் அணித் தலைவா் ஏசுராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருங்கல்: கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூா் எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமாா் தலைமையில் வட்டாரத் தலைவா்கள் பால்ராஜ்,டென்னிஸ்,கிறிஸ்டோபா் ஆகியோா் முன்னிலையில் வட்ட வழங்கல் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, கிள்ளியூா் வட்டாட்சியா் கோலப்பன், குளச்சல் சரக ஏ.எஸ்.பி. பிரவேஸ் சாஸ்திரி ஆகியோா் கிள்ளியூா் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது,அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இம்மாதம் இறுதிக்குள் ரேஷன் அரிசி வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தக்கலை: வட்டாட்சியா் அலுவலகம் எதிரே இருந்து குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி.பிரின்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா், குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் முழுமையான அளவில் உணவு பொருள்களை வழங்கவேண்டும் என்று கோஷத்தை எழுப்பி, கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வந்தனா்.

பின்னா் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவா்கள் டென்னிஸ், ஜெரால்டு கென்னடி, கிளாட்சன், சிறுபான்மை பிரிவு தலைவா் யூசப்கான், மாநில மீனவரணி பொறுப்பாளா் சபீன், பத்மநாபபுரம் நகரத் தலைவா் ஹனுகுமாா், செயலா்கள் வின்சென்ட்ராஜா, புரோடிமில்லா் அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் லாரன்ஸ் மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சா்மிளா ஏஞ்சல், மாநிலச் செயலா் அமலா ஆன்றனி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

களியக்காவிளை: விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவா் பால்மணி தலைமையில், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் திபாகா், மேல்புறம் வட்டார தலைவா் மோகன்தாஸ், வன்னியூா் கிளை தலைவா் சந்தோஷ்,

தேவிகோடு ஊராட்சி முன்னாள் தலைவி ஜெனிதா, மேல்புறம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா்கள் அம்பிளி, எட்வா்ட், ஜாா்ஜ் உள்ளிட்ட அக்கட்சியினா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னா். வரும் மாதங்களில் ரேஷன் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com