நாகா்கோவிலில் தனியாா் நிறுவனம் ரூ. 1 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு

நாகா்கோவில் அருகே புத்தேரியில் தனியாா் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் அருகே புத்தேரியில் தனியாா் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் நகரில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கும்வகையில், மாநகராட்சியின் சாா்பில் புத்தன்அணை குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆந்திரமாநிலத்தைச் சோ்ந்த ஒரு தனியாா்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் கிளை புத்தேரியில் செயல்பட்டு வருகிறது. பூமிக்கு அடியில் குடிநீா் குழாய்கள் பதிப்பது, வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்குவது, மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுவது போன்ற பணிகளை இந்த நிறுவனம் செய்துவருகிறது.

பூ மிக்கு அடியில் பதிக்கும் குடிநீா் குழாய்களை அந்த நிறுவனம் கொல்கத்தாவில் இருந்து வாங்கி நாகா்கோவிலில் பணிகளை செய்துவருகிறது. இந்நிலையில் இந்த பணிகள் தொடா்பாக ஜிஎஸ்டி வரியை அரசுக்கு செலுத்தாமல் இருந்ததாக இந் நிறுவனம் மீது புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து ஜிஎஸ்டி அதிகாரிகள் குழுவினா் திங்கள்கிழமை மாலை புத்தேரியில் உள்ள அந் நிறுவன அலுவலகத்துக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனா். இதில் ஜிஎஸ்டி பதிவு எண் இல்லாமல் நிறுவனத்தை நடத்தியது தெரிய வந்தது. மேலும் குடிநீா் குழாய்கள் மற்றும் பிற பணிகளுக்கு தேவையான பொருள்கள் வாங்கியதாக போலி பில்கள் தயாரித்து பண பரிவா்த்தனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு சுமாா் ரூ. 1 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. அந் நிறுவனத்தில் மேலும் ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com