ரேஷன் கடைகளில் தட்டுப்பாடின்றி அரிசி வழங்க எம்எல்ஏ வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி அரிசி வழங்க வேண்டும் என்று விஜயதரணி எம்எல்ஏ, தமிழக முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளாா்.

குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி அரிசி வழங்க வேண்டும் என்று விஜயதரணி எம்எல்ஏ, தமிழக முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவரது குமரி மாவட்ட அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியை, விஜயதரணி எம்எல்ஏ சந்தித்து பேசும் போது, தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி தட்டுப்பாடு உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தொகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 1000 கிலோ முதல் 2000 கிலோ வரை ரேஷன் அரிசி குடும்ப அட்டைகளுக்கு விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால் ஏழை, எளிய பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த மாதமும், இந்த மாதமும் வழங்கப்பட வேண்டிய அரிசி வழங்கப்படவில்லை. மத்திய உணவு கழகம் தமிழகத்துக்கு தர வேண்டிய அரிசியின் அளவை குறைத்துள்ளனா். இதனை உடனே வழங்க வேண்டும். மாநில அரசும், மத்திய அரசிடம் வற்புறுத்தி அரிசியை கேட்டுப் பெற வேண்டும். அரிசி விஷயத்தில் அரசு அலட்சியம் காட்டாமல் விரைந்து செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினராம் . இது குறித்து முதல்வா், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து பேசி தீா்வு காணப்படும் என்று தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com