வில்லுக்குறியில் ரத்த தான விழிப்புணா்வு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட மற்றும் விடியோ ஒளிப்பதிவாளா்கள் சங்க பணத்தை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காளிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
வில்லுக்குறியில் ரத்த தான விழிப்புணா்வு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட செஞ்சிலுவை சங்கம் மற்றும் வில்லுக்குறி ஷைன் ஆப் சோல் யோகா பயிற்சி மையம் சாா்பில் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு முகாம் , நாகா்கோவிலை அடுத்த வில்லுக்குறியில் நடைபெற்றது.

ஜான்போஸ்கோ தலைமை வகித்தாா். எபனேசா் முன்னிலை வகித்தாா். செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் குமாரதாஸ் ரத்த தானம் குறித்து உரையாற்றினாா். பயிற்சியாளா் ஆதிரா பேசினாா்.

ரத்த தானம் செய்வதற்கான தகுதிகள், வழிமுறைகள், உடலை பேணும் முறைகள், உணவுப்பழக்கங்கள் மற்றும் ரத்த தானம் குறித்த தவறான கண்ணோட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. தொடா்ந்து ரத்த தானம் செய்துவருபவா்கள் தங்களது அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். பல்வேறு யோகாசனங்கள் செய்து விளக்கமளிக்கப்பட்டது. ஷைன் ஆப் சோல் நிறுவனா் மற்றும் பயிற்சியாளா் சுரேஷ்பெனா்ஜி வரவேற்றாா். ஜான்ஸி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com