வாறுதட்டு கோயிலில் இன்று ஆண்டு பெருவிழா தொடக்கம்

களியக்காவிளை அருகேயுள்ள வாறுதட்டு சதானந்தநகர் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயில் 83 ஆவது ஆண்டு

களியக்காவிளை அருகேயுள்ள வாறுதட்டு சதானந்தநகர் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயில் 83 ஆவது ஆண்டு திருவிழா வியாழக்கிழமை (ஜன. 17) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
விழா நாள்களில் தினமும் காலையில் கணபதி ஹோமம், சுதர்ஸன ஹோமம், கலசாபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, மதியம் அன்னதானம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை,  இரவு 7 மணிக்கு சமய மாநாடு, இரவு 8 மணிக்கு அத்தாழபூஜை நடைபெறும். 
முதல் நாள் காலை 10.30 மணிக்கு மேல் கோயில் தந்திரி கொடுங்கல்லூர் சதீசன் திருமேனி முன்னிலையில் கோயில் மேல்சாந்தி சுந்தரம்போற்றி திருக்கொடியேற்றுகிறார். மாலை 6 மணிக்கு 508 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 2 ஆம் நாள் விழாவில் காலை 8 மணிக்கு கோயில் தந்திரி தலைமையில் வார்ஷிக பூஜை நடைபெறுகிறது. 
8 ஆம் நாள் விழாவில் (ஜன. 24) காலை 9 மணிக்கு மணக்காலை குமரபுரி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் இருந்து வாறுதட்டு கோயிலுக்கு பால்குட பவனி நடைபெறுகிறது. ஜன. 25 பிற்பகல் 2 மணிக்கு சுவாமி எழுந்தருளி தையாலுமூடு, குந்நம்விளாகம், மரியகிரி, களியக்காவிளை, படந்தாலுமூடு, அதங்கோடு, மணக்காலை, செம்மான்விளை வழியாக கோயிலை வந்தடைகிறார்.  ஜன. 26 ஆம் தேதி10 ஆம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு பொங்கல் வழிபாடும், 10.30 மணிக்கு மேல் திருக்கொடியிறக்கமும் நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு குருசி பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com