13 இல் நாகர்கோவில் அல்போன்சா அகாதெமி கலை, அறிவியல் போட்டிகள்

நாகர்கோவில் செயின்ட் அல்போன்சா அகாதெமியின் கலை மற்றும் அறிவுத்திறன் போட்டிகள் சனிக்கிழமை (ஜூலை 13) நடைபெறுகிறது. 

நாகர்கோவில் செயின்ட் அல்போன்சா அகாதெமியின் கலை மற்றும் அறிவுத்திறன் போட்டிகள் சனிக்கிழமை (ஜூலை 13) நடைபெறுகிறது. 
  நாகர்கோவில்  செயின்ட்  அல்போன்சாஅகாதெமி பார் எக்ஸலன்ஸ் சார்பில் ஆண்டு தோறும் புனித அல்போன்சா திருத்தலத் திருவிழாவைமுன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான  பலபோட்டிகள் நடத்தப்படுகின்றன.
  இதில்,  பாட்டுப் போட்டி, தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கிராமிய குழு நடனப் போட்டி, பரதநாட்டியம், ஓவியம் , விநாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.  நிகழாண்டுக்கானபோட்டிகள்  சனிக்கிழமை  நடைபெறவுள்ளது.  இதில், எல்.கே.ஜி.  முதல்  12  ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை  6 பிரிவுகளாக  பிரித்தும்,  கல்லூரி மாணவர்கள் தனிப்பிரிவாகவும்,  ஆசிரியர்கள் தனிப்பிரிவாகவும் பிரித்துப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
   போட்டிகளில் பங்கு பெற விரும்பும் போட்டியாளர்கள்,  அகாதெமி சார்பில் வழங்கப்பட்ட பதிவு  விண்ணப்பத்தில் தாங்கள் பயிலும் கல்வி நிறுவன தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரின் கையொப்பம் பெற்று பதிவுக் கட்டணத்துடன் ஜூலை 11 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய  வேண்டும். குறிப்பிட்டதேதிக்குள் பதிவு செய்யாதோர் போட்டியில் பங்குபெற அனுமதிக்கப்பட மாட்டார்கள். 
  போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா ஆகஸ்ட் மாதம்  4 ஆம் தேதி  நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என்று அமைப்பின்  தலைவர் மற்றும் புனித அல்போன்சா திருத்தலப் பங்குத் தந்தை ஜான் தெரிவித்துள்ளார்.
  போட்டிக்கான ஏற்பாடுகளை  அமைப்பின் நிறுவனர் தாமஸ் பெளவத்துப்பறம்பில், துணைத் தலைவர்  அஜின் ஜோஸ், செயலர்  ராஜையன், நிகழ்ச்சிஒருங்கிணைப்பாளர்கள்  ஜாய்ஸ் ஜேக்கப், தேவராஜ்,  அமைப்பாளர் ஜார்ஜ் ஸ்டீபன், துணைச் செயலர் பிரேம்கலா ஆகியோர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com