காமராஜர் பிறந்தநாள் விழா:  பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

காமராஜர்  பிறந்த நாளையொட்டி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்

காமராஜர்  பிறந்த நாளையொட்டி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்  நடைபெறும் என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ராஜேஷ் குமார்  எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு  ஜூலை15 ஆம்  குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ்  சார்பில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்படும்.        
எனவே, மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்விக்கண் திறந்த காமராஜர் என்ற தலைப்பிலும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம்   வகுப்பு வரை தமிழக வளர்ச்சியில் காமராஜரின் பங்கு என்ற தலைப்பிலும், பதினொன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை காமராஜரும் தேசிய அரசியலும் என்ற தலைப்புகளிலும் கீழ்க்காணும் இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. 
  ஜூலை   12 ம் தேதி காலை 10 மணிக்கு பத்மநாபபுரம் நகரத்திற்குள்பட்ட  பகுதியான என்.ஜி.ஓ. ஹோமில்  பிற்பகல்  2 மணிக்கு முன்சிறை மேற்கு வட்டாரத்தில் வாவறை தனியார் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. ஜூலை 13ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு திருவட்டாறு  வட்டாரத்திற்கு உள்பட்ட  கிருபை மஹாலிலும், காலை 10 மணிக்கு  முன்சிறை கிழக்கு வட்டாரத்திற்குள்பட்ட புதுக்கடை பேருந்து நிலையம் பின்புறம்  உள்ள நூலக கலை அரங்கத்திலும், காலை 9 மணிக்கு மேல்புறம் கிழக்கு,மேற்கு வட்டாரங்களில்  அருமனை தனியார் பள்ளியிலும், கிள்ளியூர் கிழக்கு வட்டாரத்தில் காலை 10 மணிக்கு துண்டத்துவிளை புனித அந்தோணியார் உயர் நிலைப்பள்ளியிலும், காலை 10 மணிக்கு திருவட்டாறு மேற்கு வட்டாரத்தில் பிஎன்என் திருமண மண்டபத்திலும், குழித்துறை நகர பகுதியில் காலை 9 மணிக்கு ஒய்.எம்.சி.ஏ. அரங்கிலும் போட்டிகள் நடை பெறுகிறது.
  இந்த போட்டிகளில், குமரி மேற்கு மாவட்டத்திற்குள்பட்ட பள்ளி மாணவர், மாணவிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். மேலும் பேச்சு போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்ய விரும்புவோர் 8675554141, 9597992569, 9080737246 என்ற செல்லிடப்பேசி எண்களை தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
  இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜூலை 21ஆம் தேதிபரிசுகள் வழங்கப்படும்  என தெரிவிக்ககப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com