கருங்கல்லில் மார்க்சிஸ்ட் கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 30th July 2019 07:05 AM | Last Updated : 30th July 2019 07:05 AM | அ+அ அ- |

தேசிய புதிய கல்விக் கொள்கையை கண்டித்து கருங்கலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலர் சாந்தகுமார் தலைமையில் வட்டாரக்குழு உறுப்பினர் குமார், கட்சியின் நிர்வாகிகள் சோபன்ராஜ், முருகேசன், பிரபின், காஸ்ட்டோ, டேவிட், அமல்ராஜூ, சிஜூ உள்ளிட்டோர் கருங்கல் பேருந்து நிலையம், ராஜீவ்சந்திப்பு, கருமாவிளை, மிடாலக்காடு, பாலூர், திப்பிரமலை, முள்ளங்கனாவிளை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கையெழுத்து பெற்றனர்.