களியக்காவிளை அருகே தவறி விழுந்தவர் பலி
By DIN | Published On : 18th June 2019 09:38 AM | Last Updated : 18th June 2019 09:38 AM | அ+அ அ- |

களியக்காவிளை அருகே கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
களியக்காவிளை அருகே மரியகிரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன் (45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் ஜெயனும் உடல்நலம் பாதிக்கப்பட்டு பாறசாலை அரசு மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தாராம். இதனிடையே, ஓய்வில் இருந்த ஜெயன், கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.