நாகர்கோவிலில் வனத்துறை  அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

தமிழ்நாடு வனத்துறை சார்பில் தென்மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


நாகர்கோவில்: தமிழ்நாடு வனத்துறை சார்பில் தென்மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு,  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ரப்பர் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான அமித்அஸ்தானா வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே,  முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், வனத்துறை தலைவருமான பி.துரைராசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
கூட்டத்தில் வனத்துறை மற்றும் ரப்பர் கழக திட்டப்பணிகள், ரப்பர் உற்பத்தி, பணியாளர்கள் நலன் குறித்து துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.  தொடர்ந்து, அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளை அமைச்சர் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதில்,  முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (தென்மண்டலம்,) ஆர்.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாத்,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரின்ஸ்,  மனோதங்கராஜ், எஸ்.ராஜேஷ் குமார், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன்,  தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் அ.ராஜன், வனத்துறை மற்றும் அரசு ரப்பர் கழக அலுவலர்கள் கலந்துகொண்டனர். அரசு ரப்பர் கழக பொதுமேலாளர் சி.ஆனந்த் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com