ஆரல்வாய்மொழி பள்ளியில் யோகா தினம்
By DIN | Published On : 25th June 2019 05:49 AM | Last Updated : 25th June 2019 05:49 AM | அ+அ அ- |

ஆரல்வாய்மொழி புனித ஜோசப் சர்வதேசப் பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாகி ஜீலி தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் சொக்கலிங்கம் பிள்ளை, யோகாவின் நன்மைகள் குறித்துப் பேசினார்.
இதையொட்டி, மாணவர், மாணவிகள் பல்வேறு யோகாசனங்கள் செய்தனர். பள்ளியின் துணை முதல்வர் ராஜரெஜினா மேரி நன்றி கூறினார்.