தடைக்கால நிவாரண உயர்வு கோரி குளச்சலில் மீனவர்கள் போராட்டம்

மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி

மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, குமரி மாவட்ட  மீன்தொழிலாளர் சங்கத்தினர் குளச்சலில் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில், நாட்டுப்படகு, கட்டுமர மீனவர்களுக்கு மானிய விலையில் 500 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்; ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ. 25 என்பதை ரூ. 62 ஆக உயர்த்தி, மானியத்தை வங்கியில் செலுத்த வேண்டும் என பிறப்பித்துள்ள உத்தரவை திரும்பப் பெற வேண்டும்;  ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்;  மீன்பிடி தடைகாலத்தை 45 நாள்களிலிருந்து 61 நாள்களாக உயர்த்திய நிலையில், நிவாரணத்தையும் ரூ. 5,000இல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்த வேண்டும்; மண்ணெண்ணெய் மானியத்துக்கு விண்ணப்பிக்கச் சென்ற எ.பிராங்கிளின் என்பவரை அவமானப்படுத்தியதாக குற்றம்சாட்டப்படும் மீன்துறை உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
குளச்சல், சைமன் காலனி மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன் நடைபெற்ற தர்னாவுக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலர் எம்.செல்வராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. ஏ.வி.பெல்லார்மின், மாவட்டப் பொருளாளர் டிக்கார்தூஸ், மாவட்ட பொதுச்செயலர் எஸ்.அந்தோணி, மாவட்டத் தலைவர் கே.அலெக்ஸாண்டர், மாவட்ட நிர்வாகி மரிய ஜார்ஜ், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவர் ஜி.செலஸ்டின் ஆகியோர்  விளக்கிப் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல், ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com