பாலப்பள்ளத்தில் தெருவிளக்குகள் எரியாததால் மக்கள் அவதி

கருங்கல் அருகேயுள்ள பாலப்பள்ளம் பேரூராட்சியில் பல மாதங்களாக எரியாத தெருவிளக்குகளை உடனே சீரமைக்க

கருங்கல் அருகேயுள்ள பாலப்பள்ளம் பேரூராட்சியில் பல மாதங்களாக எரியாத தெருவிளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 
கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ந்துவரும் பேரூராட்சிகளில் ஒன்று பாலப்பள்ளம் பேரூராட்சி. இப்பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில், பெரும்பாலான வார்டுகளில்  தெருவிளக்குகள் முறையாக அமைக்கப்படவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால், 1,3,4,7,18 ஆகிய வார்டுகளுக்குள்பட்ட தேவிகோடு, ஆலஞ்சி, குற்றுதாணி, மிடாலக்காடு, வெள்ளியாவிளை, தேவிக்கடை, சேந்திவிளை உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் பழுதாகி பல மாதங்களாக எரியவில்லையாம்.
இது அப்பகுதி மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கூறிய பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதால், சமூக விரோதிகள் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றும், பெண்கள் கடைகளுக்குக்கூட இரவு செல்ல முடியாத நிலை உள்ளது எனவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காணுமாறு பேரூராட்சி நிர்வாகத்துக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com