குமரியில் பெண்களுக்கான தொழில் பயிற்சி முகாம்

கன்னியாகுமரியில் ஏழைப் பெண்களுக்கான 90 நாள் தொழில் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கன்னியாகுமரியில் ஏழைப் பெண்களுக்கான 90 நாள் தொழில் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 கன்னியாகுமரி ஸ்டெல்லா மாரீஸ் நிறுவனமும்,  சென்னை சர்வதேச திறன் மேம்பாட்டு மையமும் இணைந்து 18 முதல் 35 வயது வரையிலான ஏழைப் பெண்களுக்கான 90 நாள் தொழில் பயிற்சி வகுப்பினை நடத்துகின்றன. இதில் முதல்கட்டமாக கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 30 பெண்கள் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு மருத்துவமனை மற்றும் ஸ்டார் ஹோட்டல்களில் பணிபுரிவதற்கான அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்படும். இவர்களுக்கு கன்னியாகுமரி, சென்னை, திருச்சி, ஹைதராபாத், மதுரை உள்ளிட்ட நகரங்களில் பயிற்சிகள் அளிக்கப்படும்.
 தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு யுனிடோவின் ஓய்வு பெற்ற முதன்மை ஆலோசகர் வி.ஜெபமாலை ஆராச்சி தலைமை வகித்தார்.  வின்சென்ட் அடிகளார் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம் சாந்திகிரி ஆசிரமம் சுவாமி முக்தா ஜனா, ஸ்டெல்லா மாரீஸ் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா, அருட்சகோதரி  ரோஸ் பிரான்சிஸ், பிக்ஸ் அமைப்பின் இயக்குநர்கள் எம்.எஸ்.இளங்குமரன், டி.கே.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com