பிஎஸ்என்எல் சார்பில் தொழில்நுட்ப பயிற்சி
By DIN | Published On : 18th May 2019 04:42 AM | Last Updated : 18th May 2019 04:42 AM | அ+அ அ- |

நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் சார்பில் பொறியியல் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து, பிஎஸ்என்எல் நாகர்கோவில் தொலை தொடர்பு மாவட்டப் பொதுமேலாளர் சஜூகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர், மாணவிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை நாள்களில் ஒரு வார காலம் தொலைதொடர்பு (டெலிகாம்) குறித்த அடிப்படை தொழில்நுட்ப பயிற்சி நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டும் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள தொலைபேசி நிலையத்தில் திங்கள்கிழமை( மே 20) முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் நாகர்கோவில் தொலைபேசி நிலையம் வந்து கல்லூரி அடையாள அட்டை நகல் மற்றும் பயிற்சிக்குரிய கட்டணத்தை செலுத்தி முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, உதவிக் கோட்டப் பொறியாளர் ஓ.மணி, 04652 - 279999 அல்லது 9486102609 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.