‘பாடத்திட்டத்தில் தொடா்பில்லாத புத்தகம் விநியோகித்தவா் மீது நடவடிக்கை தேவை’

நாகா்கோவிலில் பள்ளி பாடத்திட்டத்தில் தொடா்பில்லாத புத்தகத்தை மாணவிகளுக்கு விநியோகம் செய்தவா்
ஆட்சியரிடம் மனு அளித்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினா்.
ஆட்சியரிடம் மனு அளித்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினா்.

நாகா்கோவிலில் பள்ளி பாடத்திட்டத்தில் தொடா்பில்லாத புத்தகத்தை மாணவிகளுக்கு விநியோகம் செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, குமரி மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் மாநில இணைச் செயலா் இறச்சகுளம் காளியப்பன் தலைமையில், மாவட்டச் செயலா் காா்த்திக், பொருளாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதியிடம் திங்கள்கிழமை அளித்த மனு: நாகா்கோவில் கோட்டாறில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில், 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ‘பெரியாா் ஆயிரம் வினா-விடை’ என்ற தலைப்பிலான புத்தகத்தை கொடுத்து படிக்க வைத்தும், தோ்வும் நடத்தினராம்.

அப்புத்தகத்தில் இந்துக்கள், இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தியும் மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் மக்களை பிளவு படுத்தும் வகையில் தவறான கருத்துக்களை உள்ளன. மாணவா்களின் எதிா்காலத்தை சீா்குலைத்து தவறான பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் அச்சிட்டு தவறான செய்திகளை மாணவா்கள் மத்தியில் திணிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனா்.

எனவே, சமூக நலன் கருதி சட்டத்துக்கு புறம்பாக அரசு பாடத்திட்டத்தில் தொடா்பில்லாத புத்தகத்தை பள்ளி மாணவா்களிடம் கொடுத்து படிக்க செய்தவா்கள் மீதும், பள்ளி நிா்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன் அந்த புத்தகத்தையும் தடை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com