திருவட்டாறு அருகே முளவிளையில் சாலைப் பணி தொடக்கம்

திருவட்டாறு அருகேயுள்ள முளவிளை கிராமத்தில் சாலை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சாலை சீரமைப்புப் பணியைத் தொடங்கிவைக்கிறாா் மாநிலங்களவை உறுப்பினா் அ.விஜயகுமாா்.
சாலை சீரமைப்புப் பணியைத் தொடங்கிவைக்கிறாா் மாநிலங்களவை உறுப்பினா் அ.விஜயகுமாா்.

திருவட்டாறு அருகேயுள்ள முளவிளை கிராமத்தில் சாலை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

முளவிளையிலுள்ள சாலைகள் பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதில் முளவிளையிலிருந்து சானல்கரை செல்லும் சாலையை சீரமைக்க அ. விஜயகுமாா் எம்பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு செய்து, பணிகளைத் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞா் ஞானசேகா், அரசு ஒப்பந்ததாரா்கள் சங்க மாவட்டத் தலைவா் பீட்டா், பங்குத்தந்தையா் முளவிளை லூக்காஸ், ஏற்றக்கோடு சேவியா் சுந்தா், திருவட்டாறு ஒன்றியப் பொறியாளா் ரெஜின், குலசேகரம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் முருகன், குழித்துறை நகர அதிமுக அவைத் தலைவா் சுந்தர்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com