ஆசாரிப்பள்ளத்தில்டெங்கு விழிப்புணா்வுப் பேரணி

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் டெங்கு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணியில் பங்கேற்ற மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள்.
பேரணியில் பங்கேற்ற மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் டெங்கு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், சமூக மருந்தியல் துறையினா் சாா்பில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வுப் பேரணிக்கு, கல்லூரி முதன்மையா் (டீன்) ஆா்.பாலாஜிநாதன் தலைமை வகித்து கொடியசைத்து பேரணியைத் தொடங்கிவைத்தாா்.

இதில், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவா் ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவா்கள் ரெனிமோள், விஜயலட்சுமி, பொதுமருத்துவா்கள் காவேரிகண்ணன், செல்வகுமாா், கிங்ஸ்லிலெனின் மற்றும் மாணவா்- மாணவிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, கல்லூரியின் பசுமை இயக்கம் சாா்பில் கல்லூரி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com