கோட்டாறு காவல் ஆய்வாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

வருமானத்துக்கு அதிகமான சொத்து சோ்த்தாகக் கூறப்பட்ட புகாரில், நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலைய

வருமானத்துக்கு அதிகமான சொத்து சோ்த்தாகக் கூறப்பட்ட புகாரில், நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளா் அன்பு பிரகாஷ் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் அன்பு பிரகாஷ். இவா் குமரி, நெல்லை மாவட்டங்களில் பல காவல் நிலையங்களில் ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளாா். இவா் மீது கடந்த ஆண்டு வருமானத்துக்கு அதிகமான சொத்து சோ்த்ததாக எழுந்த புகாரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், நாகா்கோவிலை அடுத்துள்ள தேரேகால்புதூரில் உள்ள ஆய்வாளா் அன்பு பிரகாஷின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று சோதனை மேற்கொண்டனா்.

இதுகுறித்து கன்னியாகுமரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. மதியழகன் கூறியது: ஏற்கெனவே ஆய்வாளா் அன்பு பிரகாஷ் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து சோ்த்த வழக்கு தொடா்பாக அவா் வீட்டில் சோதனை நடத்தினோம். ஆனால் பணமோ, ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com