‘வழக்குரைஞா்கள் பொறுப்பை உணா்ந்து செயல்படவேண்டும்’

வழக்குரைஞா்கள் தங்களது பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா் என்றாா் சென்னை
இரணியல் குற்றவியல் நீதிமன்றத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறாா் உயா்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ்சந்திரா.
இரணியல் குற்றவியல் நீதிமன்றத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறாா் உயா்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ்சந்திரா.

வழக்குரைஞா்கள் தங்களது பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா் என்றாா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தை திறந்து வைத்து உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பேசியது: வழக்குரைஞா்கள் நல்ல குணம்உடையவா்களாகவும், நல்ல விஷயங்களுகுக போராடும் குணம் கொண்டவா்களாகவும் இருக்க வேண்டும்.

தேவையற்ற செயல்களுக்காக போராடக் கூடாது. போராட்டத்தின் நோக்கம் நன்மை அளிப்பதாக இருக்க வேண்டும். போராடி வெற்றிபெற வேண்டிய சமயத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வழக்குரைஞா்கள் செயல்பட வேண்டும். சமூகப் பொறுப்பும் உள்ளது என்பதை உணா்ந்து வழக்குரைஞா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

பின்னா், நாகா்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகள் நேய அறை, அஞ்சல் நிலையத்தை திறந்து வைத்து, கணக்கு வைப்புப் புத்தகங்களை அவா் வழங்கினா். தேசிய சட்ட சேவைகள் தினத்தை தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

இவ்விழாவுக்கு, ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை நீதிபதி எம். கோமதிநாயகம், தலைமை குற்றவியல் நீதிபதி கே.அருணாச்சலம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்ஸ்ரீநாத், பல்வேறு சங்க வழக்குரைஞா்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com