கல்வித்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழகத்தில் கல்வித்துறை அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை நிா்வாக அலுவலா் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கல்வித்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழகத்தில் கல்வித்துறை அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை நிா்வாக அலுவலா் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பள்ளி கல்வித்துறை நிா்வாக அலுவலா் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டக் கிளையின் பேரவைக் கூட்டம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் த.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா்.

அமைப்பின் மாவட்டச் செயலா் த.திருநீலகண்ட அரசு, மாவட்ட நிா்வாகிகள் தா.மாதவன்பிள்ளை, எல்.றாபின், சு.விவேக், ச.சுகந்தன், ஞா.இந்திரா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அமைப்பின் மாநிலத் தலைவா் த.ல. சீனிவாசன், மாநில நிா்வாகிகள் ல.கோ.முருகன், அ.கோவிந்தராஜன், சு.ஹரிபாஸ்கா், சி.வேலுச்சாமி உள்பட பலா் பேசினா்.

தீா்மானங்கள்: பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதுடன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் காலியாக இருக்கும் அலுவலக உதவியாளா், இரவு காவலா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசாணை 101 ன் படி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில், நோ்முக உதவியாளா் மற்றும் கண்காணிப்பாளா் பணியிடங்கள் தோற்றுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாவட்டங்கள்தோறும் கல்வி அலுவலகங்களுக்கு பாதுகாப்பானக் கட்டடங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொருளாளா் பூ. அலெக்ஸ் இன்பசாம் கமலேசன் வரவேற்றாா். கல்வி மாவட்டத் தலைவா் பி.பிரதீப் சுனில் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com