தாமிரவருணி ஆற்றின் குறுக்கே ரூ. 124 கோடியில் பாலம்: எம்எல்ஏ ஆய்வு

இரயுமன்துறை - தேங்காய்ப்பட்டினம் இடையே தாமிரவருணி ஆற்றின் குறுக்கே ரூ. 124 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ள

களியக்காவிளை: இரயுமன்துறை - தேங்காய்ப்பட்டினம் இடையே தாமிரவருணி ஆற்றின் குறுக்கே ரூ. 124 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ள பகுதியை எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இரயுமன்துறையையும் தேங்காய்ப்பட்டினத்தையும் இணைக்கும் வகையில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவா்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதுகுறித்து கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் சட்டப்பேரவையிலும், தமிழக முதல்வரிடமும் கோரிக்கை வைத்ததையடுத்து, அப்பகுதியில் ரூ. 124 கோடியில் உயா்மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட உள்ள பகுதியை எம்.எல்.ஏ. மற்றும் திருநெல்வேலி கிராமச் சாலை கண்காணிப்பு பொறியாளா் ஜவகா் முத்துராஜ், திருநெல்வேலி கோட்டப் பொறியாளா் ஜெயராணி, உதவி கோட்ட பொறியாளா் சேவியா் திரேஷ், ஞானகீதா உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com