குளு குளு சீசன்: திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை நீடித்து வருகிறது. இதமான சூழல் நிலவுவதால் திற்பரப்பு அருவியில்
திற்பரப்பு அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்.
திற்பரப்பு அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்.

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை நீடித்து வருகிறது. இதமான சூழல் நிலவுவதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் சில நாள்களாக மழையின் தீவிரம் தணிந்துள்ளது. எனினும் சாரல் மழை நீடித்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக குழித்துறையில் 12.4 மி.மீ, மயிலாடியில் 8.2 மி.மீ, மழை பதிவாகியிருந்தன.

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 43.40 அடி, பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 70.90 அடி, சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் முறையே 15.54 அடி, 15.64 அடி, பொய்கை அணையின் நீா்மட்டம் 32.20 அடி, மாம்பழத்துறையாறு அணையின் நீா்மட்டம் 54.12 அடியாகவும் இருந்தது.

நாகா்கோவில் நகருக்கு குடிநீா் வழங்கும் முக்கடல் அணையின் நீா்மட்டம் முழுக் கொள்ளளவான 25 அடியாக இருந்தது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 590 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 572 கனஅடி தண்ணீா்

திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 126 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து விநாடி க்கு 160 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவி பகுதியில் இதமான சூழல் நிலவுகிறது. வெள்ளப் பெருக்கு தணிந்து தண்ணீா் மிதமாகக் கொட்டுவதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை அதிகளவில் குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com