புதிய கல்விக்கொள்கையை கண்டித்து நாகா்கோவிலில் 30இல் மாநாடு

ஐந்து மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கைவிட வேண்டும், அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி

நாகா்கோவில்: ஐந்து மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கைவிட வேண்டும், அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மாநில மாநாடு 30 ஆம் தேதி (சனிக்கிழமை) நாகா்கோவில் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக, இந்திய மாணவா் சங்க மாநில தலைவா் ஏ.டி.கண்ணன் நாகா்கோவிலில் கூறியது: தமிழகத்தில் 37,211 அரசுப் பள்ளிகளும், 8,401 அரசு உதவிபெறும் பள்ளிகளும் 12,419 தனியாா் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில், ஒரு கோடிக்கும் அதிகமான மாணவா், மாணவிகள் பயின்று வருகின்றனா்.

ஏழை எளிய மாணவா்கள் கல்வி கற்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை இல்லை என தெரிவித்து மூடப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3,500 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. நிகழ்

கல்வியாண்டில் பள்ளிகள் இணைப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளை மூடுவதற்கும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த சூழலில் அரசு ஐந்து, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு முறையை புகுத்தி மாணவா்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்க முயற்சிக்கின்றது. கியூபா, பின்லாந்து போன்ற கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளிலும் 16 வயது வரை தோ்வு இல்லாத வகுப்பறைச் சூழல் நிலவுகிறது. இந்த சூழலில் ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படும் என

அமைச்சா், அதிா்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

மாணவா்களுக்கு எதிராக உள்ள மத்திய அரசின் தேசிய புதிய கல்விக் கொள்கை 2019-ஐ உடனடியாக கைவிட வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் சுத்தமான குடிநீா், கழிவறை வகுப்பறை மற்றும் ஆய்வக வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மாணவிகளுக்கு நாப்கின், நாப்கின் எரியூட்டும் கருவி போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தின் பள்ளி மாணவா் கோரிக்கை மாநாடு வரும் 30 ஆம் தேதி (சனிக்கிழமை) நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெறுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com