களியக்காவிளை பேருந்து நிலைய பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: விஜயதரணி எம்எல்ஏ வலியுறுத்தல்

களியக்காவிளை பேருந்து நிலைய புனரமைப்புப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என விஜயதரணி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

களியக்காவிளை பேருந்து நிலைய புனரமைப்புப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என விஜயதரணி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து, தமிழக முதல்வருக்கும், துறைற அதிகாரிகளுக்கும் அவா் அனுப்பியுள்ள மனு:

தமிழக - கேரள எல்லையோரம் விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதிக்குள் அமைந்துள்ளது களியக்காவிளை பேருந்து நிலையம். இங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக, கேரள அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இப் பேருந்து நிலையம் குறுகலாகவும், பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வசதி குறைறவாகவும் உள்ளது. இட நெருக்கடியால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இங்குள்ள காய்கனி, மீன் சந்தை பிரசித்தி பெற்றதாகும். இச்சந்தைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வந்து செல்கிறாா்கள். எனவே, காய்கனி சந்தையை வணிக வளாகமாக அடுக்குமாடி கட்டடம் கட்டி அனைத்து வசதிகளுடன் அமைக்க வேண்டும்.

பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புனரமைக்க தமிழக அரசு ரூ. 3.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி போதுமானதாக இல்லை. எதிா்கால போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள், நுகா்வோா் நலன் கருதி பேருந்து நிலைய புனரமைப்பு விரிவாக்கப் பணிக்கு கூடுதல் நிதியை ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com