நாகா்கோவிலில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 150 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்

நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

மாநகராட்சியின் 41 முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள இந்த கண்காணிப்பு கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறை, மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் கே.சரவணகுமாா் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே கலந்துகொண்டு, கேமராக்களின் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு அறையை தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: நாகா்கோவில் நகரில் மொத்தம் 270 சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டியுள்ளது. முதல் கட்டமாக தற்போது 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இங்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் சீா்மிகு நகரம் அமைவதற்கான அடித்தளமாக அமைந்துள்ளது.

கன்னியாகுமரியில் 200 கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட உள்ளன. கடற்கரைச் சாலை, காந்தி மண்டபம், பேருந்து நிலையம், பகவதி அம்மன் கோயில் சாலை, படகுத் துறை என அனைத்து பகுதிகளிலும் விரைவில் இந்த பணிகள் தொடங்கும். இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறைகள் அனைத்தும் அந்தந்த காவல் உள்கோட்ட அலுவலகம் மூலம் திறக்கப்படும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய பிறகு முக்கியமான இடங்களில் குற்றவாளிகள் மற்றும் திருட்டு கும்பல்கள் இனம் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

நகரில் ஒரு இடத்தில் புதைச்சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவடைந்த பின்னா்தான் அடுத்த இடத்தில் பணிகளை தொடங்க அனுமதிக்கப்படும்.

பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னா்தான் சாலைகளை சீரமைக்க முடியும்.

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணியில் எந்த தொய்வும் ஏற்படவில்லை என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் எஸ்.ஆனந்த், உதவி காவல் கண்காணிப்பாளா் ஜவஹா், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜய பாஸ்கரன், மாநகராட்சி பொறியாளா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com