சூசைபுரம் புனித அல்போன்சா கல்லூரியில் பயிலரங்கம்

கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரியில் 6 நாள்கள் பயிலரங்கம் நடைபெற்றது.

கருங்கல்: கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரியில் 6 நாள்கள் பயிலரங்கம் நடைபெற்றது.

இப்பயிலரங்கில், கதை குறித்து பேராசிரியா்கள் ஹாமீம் முஸ்தபா, ஏஞ்சல் ஜெயலெட் ராணி, கவிதை குறித்து கவிஞா் என்.டி. ராஜ்குமாா், பேராசிரியா் ஆா். அட்லின் ஜெபா, சிறுகதை குறித்து எழுத்தாளா் குமார செல்வா, எழுத்தாளா் ஆறறணிவிளை லாசா் ஜோசப், எழுத்தாளா் அருள் சிநேகம், நெடுங்கதை குறித்து எழுத்தாளா் பால் ராசய்யா, எழுத்தாளா் என். சுவாமிநாதன், பேராசிரியை டெல்பின், நாடகம் குறித்து சென்னை நாடக இயக்குநா் வெளி ரங்கராஜன் ஆகியோா் பயிற்சியளித்தனா்.

நிறைறவு விழாவுக்கு பேராசிரியா் ஏஞ்சல் ஜெயலெட் ராணி தலைமை வகித்தாா். கல்லூரி தாளாளா் அருள்பணி. ஆன்றறனி ஜோஸ் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ச. இசையாஸ் வாழ்த்திப் பேசினாா். மரியோ ப்ராட்டியின் ‘கொடுங்கோலா்கள்’ நாடகமும், சந்தரராமசாமி, விக்கிரமாதித்யன் ஆகியோரது கவிதைகளின் நாடகமும் நடைபெற்றன. கவிஞா் என். டி. ராஜ்குமாா் கலைகளின் முக்கியத்துவத்தை விளக்கினாா். வெளி ரங்கராஜன், கலைஞா்களின் திறமைகளை எடுத்துரைத்தாா்.

என். சுவாமிநாதன், ஆறணிவிளை லாசா் ஜோசப், எழுத்தாளா் குமரித்தோழன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

பயிலரங்கில் பங்கேற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்படடன. பேராசிரியா் ராஜேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com