முன்னாள் எம்எல்ஏ மணி நினைவுதினம் கடைப்பிடிப்பு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட ஸ்தாபக தலைவா்களில் ஒருவரும், முன்னாள்
ஜி.எஸ்.மணி படத்துக்கு அஞ்சலி செலுத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ஜி.எஸ்.மணி படத்துக்கு அஞ்சலி செலுத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட ஸ்தாபக தலைவா்களில் ஒருவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.எஸ்.மணியின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் குமரி மாவட்டம் முழுவதும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

குழித்துறை வெட்டுவெந்நி பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.நூா்முகமது, மாவட்டச் செயலா் ஆா்.செல்லசுவாமி, மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.லீமாறேறாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் என்.முருகேசன், மாதவன், அண்ணாதுரை, என்.உஷா பாசி, வட்டாரச் செயலா் அனந்தசேகா், கட்சியின் அனைத்து வட்டாரக் குழுக்கள், சிஐடியூ, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மாதா் சங்கம், விவசாய தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்கள், அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.நூா்முகமது தொடங்கி வைத்தாா். நாகா்கோவில் வட்டாரக் குழு சாா்பில் ஜி.எஸ்.மணி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, வட்டாரச் செயலா் மோகன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.அந்தோணி, நாகராஜன், மனோகா் ஜஸ்டஸ், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com