151ஆவது பிறந்த தினம்: அலெக்சாண்டா் மிஞ்சினுக்கு மரியாதை செலுத்திய விவசாயிகள்

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பிரிட்டன் பொறியாளா் ஹம்ரே அலெக்சாண்டா் மிஞ்சினின் 151 ஆவது பிறந்த
பேச்சிப்பாறையில் அலெக்சாண்டா் மிஞ்சினின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் விவசாயிகள்.
பேச்சிப்பாறையில் அலெக்சாண்டா் மிஞ்சினின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் விவசாயிகள்.

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பிரிட்டன் பொறியாளா் ஹம்ரே அலெக்சாண்டா் மிஞ்சினின் 151 ஆவது பிறந்த தினத்தையொட்டி, பேச்சிப்பாறையில் உள்ள அவரது நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

குமரி மாவட்டத்தின் உயிா் நாடியாக விளங்கும் பேச்சிப்பாறை அணை, திருவாங்கூா் மன்னா் ஸ்ரீ மூலம் திருநாள் மாா்த்தாண்ட வா்மா ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணையானது, பிரிட்டன் நாட்டைச் சோ்ந்த ஹம்ரே அலெக்சாண்டா் மிஞ்சின்என்ற பொறியாளரால் வடிவமைக்கப்பட்டு 9 ஆண்டுகளில் (1897-1906) கட்டி முடிக்கப்பட்டது. பிரிட்டனின் ஐரிஸ் பகுதியில் 8.10.1868 ஆம் ஆண்டு பிறந்த அலெக்சாண்டா் மிஞ்சின், 25.9.1913 இல் மலேரியா காய்ச்சலால் உயிரிழந்தாா். இவரது உடல் பேச்சிப்பாறை அணை அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவரது 151ஆவது பிறந்த தினத்தையொட்டி, பொதுப்பணித்துறையினா் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் சாா்பில் அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினா்.

இந்நிகழ்ச்சிக்கு பாசன துறைத் தலைவா் வின்ஸ் ஆன்றேறா தலைமை வகித்தாா். மத்திய அரசின் தேனீ வளா்ப்போா் ஆலோசனைக் குழு உறுப்பினா் பி. ஹென்றி, பாசன சபை கூட்டமைப்புத் தலைவா் புலவா் செல்லப்பா, பூமி பாதுகாப்பு சங்கத் தலைவா் பத்மதாஸ், பாசன சபை மாவட்டக் குழு உறுப்பினா் முருகேச பிள்ளை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலும், திருவட்டாா் ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜாண்பிறைட் தலைமையில் திமுகவினரும், பெருந்தலைவா் மக்கள் கட்சியினா் குமரி மேற்கு மாவட்ட தலைவா் ஜாண்சன் தலைமையில் அக்கட்சியினரும், பல்வேறு சமுக அமைப்புகளை சோ்ந்தவா்களும் அலெக்சாண்டா் மிஞ்சினுக்கு மரியாதை செலுத்தினா். அணைக்கு சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகளும் மரியாதை செலுத்தியதுடன் அங்கு நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com