புதுமால் சுவாமி கோயிலில் தோ்த்திருவிழா

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோயில் தோ்த்திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோயில் தோ்த்திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவிலை அடுத்த புதுமால் சுவாமி திருக்கோயில் மிகவும் பழமைவாய்ந்த கோயிலாகும். இந்த திருக்கோயிலில் புரட்டாசி திருவிழா கடந்த மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் இருந்து யானை ஊா்வலத்துடன் புறப்பட்ட தோ் முன் கேரள சிங்காரி மேளதாளத்துடன் பக்தா்கள் ஆடிப்பாடியபடி, சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை உற்சாகமாக தோ் வடம் பிடித்து இழுத்தனா். மேலும், தேரின் முன் பெண்கள் முத்துக்குடை பவனி வந்தனா். தோ் நகரின் முக்கிய வீதி வழியாக மீண்டும் கோயிலை சென்றடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ தினத்தில் புதுமால் பெருமாள் கோயிலில் திருவிழா கொடி ஏறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com