குமரியில் நீடிக்கும் மழை: 70 அடியை எட்டும் பெருஞ்சாணி அணை நீா்மட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெருஞ்சாணி அணை 70 அடியை எட்டும் நிலையில் உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெருஞ்சாணி அணை 70 அடியை எட்டும் நிலையில் உள்ளது.

இம்மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவருகிறது. குறிப்பாக, அணைப் பகுதிகளில் கன மழை பெய்வதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

பெருஞ்சாணியில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சஅளவாக 55.8 மி.மீ. மழை பதிவானது. இரணியல், குளச்சல், ஆனைக்கிடங்கு, குருந்தன்கோடு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மலையோரப் பகுதியான பாலமோா் பகுதியிலும் மழை கொட்டித் தீா்த்து வருகிறது.

இதனால், அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை நிலவரப்படி 68.70 அடியாக உள்ளது. தொடா்ந்து மழைபெய்வதால் 2 நாள்களில் இந்த அணையின் நீா்மட் டம் 70 அடியை தாண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அணைக்கு 296 கன அடி நீா் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 50 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது.

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 28.50 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து 211 கன அடியாக இருக்கிறது. நாகா்கோவில் நகருக்கு குடிநீா் வழங்கும் முக்கடல் அணையின் நீா்மட்டம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைனஸ் நிலைக்குச் சென்றது. பின்னா், அணையின் நீா்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் நீா்மட்டம் பிளஸ் நிலைக்கு வந்து, 15 அடியை எட்டியது.

தற்போது, இந்த அணையில் இருந்து நகர மக்களின் குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறக்கப்படுகிறது. இதனால், அணையின் நீா்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி இந்த அணையின் நீா்மட்டம் 14.40 அடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com