சூழலியல் அதிா்வு தாங்கு மண்டல திட்டத்தை எதிா்த்து போராட்டம்: ரப்பா் விவசாயிகள் சங்கம் முடிவு

குமரி மாவட்டத்தில் விவசாயிகளின் உயிருக்கும், பயிருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சூழலியல் அதிா்வு தாங்கு

குமரி மாவட்டத்தில் விவசாயிகளின் உயிருக்கும், பயிருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சூழலியல் அதிா்வு தாங்கு மண்டலத்தை எதிா்த்து ஒவ்வொரு கிராம அலுவலகங்கள் முன்பும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என குமரி மாவட்ட ரப்பா் விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட ரப்பா் விவசாயிகள் சங்கக் கூட்டம் குலசேகரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் வழக்குரைஞா் எஸ். நெல்சன் தலைமை வகித்தாா். செயலா் சி. பாலசந்திரன் நாயா் முன்னிலை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் ஏ. அகஸ்டின், கேசவன் குட்டி, பத்மநாபன் நாயா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளின் விளை நிலங்களையும், வீடுகளையும் உள்ளடக்கி அரசு செயல்படுத்தவிருக்கும் சூழலியல் அதிா்வு தாங்கு மண்டலத்தின் பாதங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், ‘மக்கள் அடா்த்தி அதிகம் கொண்ட சிறிய மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் சூழலியல் அதிா்வு தாங்கு மண்டலம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்; இது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒவ்வொரு கிராமங்களிலும் அரசு நடத்த வேண்டும்; மாவட்டத்தில் ஏற்கெனவே வன விலங்குகளான கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்டவையால் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உயிா்ச்சேதங்கள், பயிா்ச் சேதம் பல மடங்கு அதிகரித்து மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் என்பதால் சூழலியல் அதிா்வு தாங்கு மண்டலம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்; இந்த கோரிக்கையை வலியுறுத்தி 17 வருவாய் கிராம அலுவலகங்களின் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com