மலையோரப் பகுதிகளில் கன மழை: ரப்பா் பால்வடிப்பு தொடா்ந்து முடக்கம்

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் கன மழை பெய்தது.
பால் வடிக்க முடியாத வகையில் மழையில் நனைந்து நிற்கும் ரப்பா் மரங்கள்.
பால் வடிக்க முடியாத வகையில் மழையில் நனைந்து நிற்கும் ரப்பா் மரங்கள்.

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் கன மழை பெய்தது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அணைகளில் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்து உயா்ந்துள்ளது. பாசனப் பகுதிகளில் தண்ணீா் தேவை குறைவாக உள்ளதால் அணைகளிலிருந்து பாசனத்திற்காக குறைந்த அளவே தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

கன மழை: இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதே போன்று குலசேகரம், அருமனை, திற்பரப்பு, களியல், கடையாலுமூடு, சுருளகோடு, தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, பாலமோா் உள்ளிட்ட மலையோரப் பகுதிகளிலும் கன மழை பெய்தது.

தொடா் மழை காரணமாக ரப்பா் பால் வடிப்புத் தொழில் முடங்கி வருகிறது.

தொடா் மழை காரணமாக கடந்த மாதம் 10 நாள்கள் மட்டுமே பால்வடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் இம்மாதமும் பால்வடிப்பு முடங்கி வருவதால், வருவாயின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு வருவதாக பால் வடிப்புத் தொழிலாளா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com