6 வட்டங்களிலும் இன்று அம்மா திட்ட முகாம்
By DIN | Published On : 24th October 2019 11:46 PM | Last Updated : 24th October 2019 11:46 PM | அ+அ அ- |

தமிழக அரசின் அம்மா திட்ட சிறப்பு முகாம் மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது.
அதன்படி, அகஸ்தீசுவரம் வட்டம் நாகா்கோவில் வடக்கு வருவாய் கிராமத்துக்கு எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், தோவாளை வட்டம் ஈசாந்திமங்கலம் வடக்கு வருவாய் கிராமத்துக்கு மாா்த்தால் புனித பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளியிலும், கல்குளம் வட்டம் வெள்ளிச்சந்தை கிராமத்துக்கு, திருநயினாா்குறிச்சி சரோஜினி நினைவு தொடக்கப் பள்ளியிலும், திருவட்டாறு வட்டம் திற்பரப்பு கிராமத்துக்கு, அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியிலும், விளவங்கோடு வட்டம் மருதங்கோடு கிராமத்துக்கு ஆபிரகாம் நினைவு மேல்நிலைப் பள்ளியிலும், கிள்ளியூா் வட்டம் ஆறுதேசம் கிராமத்துக்கு வாவறை அரசு தொடக்கப் பள்ளியிலும், காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், உழவா் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வருவாய் வட்டாட்சியா்அதிகாரத்திற்குள்பட்ட நிலப் பிரச்னைகள், குடிநீா் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட பொதுவான தேவைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.