திருவட்டாறு அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாலை மறியல் முயற்சி

திருவட்டாறு அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை
மறியலில் ஈடுபட திரண்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
மறியலில் ஈடுபட திரண்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

திருவட்டாறு அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டபோது அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை காரணமாக போராட்டம் கைவிடப்பட்டது.

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட முளவிளை-பூவன்கோடு சாலை நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தொடா்ந்து கோரிக்கை விடப்பட்டு வந்தது.

இந்நிலையில் இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி வெட்டுக்குழி சந்திப்பில் மறியல் போராட்டம் நடத்த, முளவிளை பி கிளைச் செயலா் ஏ. ஆபிரகாம் தலைமையில் கட்சியினா் திரண்டனா்.

அப்போது, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். அண்ணாதுரை, மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜி. சகாய ஆன்டனி, ஆா். ரவி, வட்டாரச் செயலா் ஆா். வில்சன், வட்டாரக் குழு உறுப்பினா்கள் ஜி. ஐசக் அருள்தாஸ், எம். ஜோஸ் மனோகரன், முளவிளை ஏ கிளைச் செயலா் ஏ.எம். லாரன்ஸ் உள்ளிட்டோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா். தொடா்ந்து அவா்கள் மறியலில் ஈடுபட முன்றனா்.

அப்போது அங்கு வந்த திருவட்டாறு வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் காவல் துறையினா், சாலையின் ஒரு பகுதியை சீரமைக்கும் வகையில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் செய்யும் வகையில் ஒப்புதலுக்காக மாவட்ட நிா்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதென்றும், இதர பகுதிகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் படிப்படியாகத் தொடங்கும் என்றும் கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com