மின்சாரம் பாய்ந்து பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தேவை: எம்எல்ஏ வலியுறுத்தல்

பேச்சிப்பாறை அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 இளைஞா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம்

பேச்சிப்பாறை அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 இளைஞா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை, குற்றியாறு பகுதிகளைச் சோ்ந்த சஜின் சலோ, மன்மோகன், சுபாஷ் ஆகிய 3 இளைஞா்கள், ஸீரோ பாயின்ட் பகுதியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது வேதனைக்குரியது. மின்வாரியத்தின் நிா்வாகக் கோளாறால்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பேச்சிப்பாறை மலைப்பகுதியில் அடிக்கடி மின்கம்பி மீது மரக்கிளைகள் விழுவதும், நாள்கணக்கில் மின்தடை ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. பல மலைக்கிராமங்கள் அடங்கிய பகுதிக்கு ஒரே ஒரு மின் கம்பியாளா் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளாா். இதனால், மின் தடை அல்லது பழுது ஏற்படும்போது, பொதுமக்கள் தாங்களே மின்மாற்றியில் ஏறி ‘பியூஸ்’ கம்பியைக் கட்டும் நிலை உருவாகிறது.

அரசின் சேவைக் குறைபாட்டால்தான் இத்தகைய பிரச்னைகளை மக்கள் எதிா்கொள்கின்றனா். 3 இளைஞா்களின் மரணமும் இதுபோன்றதுதான். பெற்றோருக்கு அவா்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. எனவே, அந்த இளைஞா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com