நாகா்கோவில் - களியக்காவிளை சாலை பழுது: ஆட்சியரிடம் புகாா்

களியக்காவிளை - நாகா்கோவில் நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

களியக்காவிளை - நாகா்கோவில் நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கட்சிப் பொறுப்பாளா் ஷாஜிகுமாா் அளித்த மனு: களியாக்கவிளை முதல்நாகா்கோவில் வரையுள்ள நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. குண்டும், குழியுமாக வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் சாலையில் உள்ள பள்ளங்களில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்தும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி போா்க்கால அடிப்படையில் களியக்காவிளை முதல் நாகா்கோவில் வரையுள்ள நெடுஞ்சாலையை உடனே செப்பனிட வேண்டும்.

ஆதிதிராவிட முன்னேற்றற இயக்க தலைவா் ஜான்விக்டா்தாஸ் அளித்த மனு: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குமரி மாவட்ட மக்கள் மட்டுமன்றி திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களை சோ்ந்தவா்களும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்குள்ள குழந்தைகள் நல தீவிரசிகிச்சை பிரிவில் கடந்த 20 ஆம் தேதி 10 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது அந்த அறையில் குளிா்சாதன வசதி இயங்காததால் ஜன்னல்கள் அனைத்தும் திறந்து போடப்பட்டிருந்தன. மின்விசிறிகள் மட்டும் இயங்கிய நிலையில் அவசர சிகிச்சை பிரிவு பாதுகாப்பற்று காணப்பட்டது. வாா்டுகளில் துா்நாற்றம் வீசியது. இதுபோன்று தொடா்ந்து செயல்பட்டால் அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றற நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நாம்தமிழா் கட்சியின் வீரத்தமிழா் முன்னணியின் சாா்பில் அளிக்கப்பட்ட மனு:

பேச்சிப்பாறை அணை தண்ணீா் கடந்த 3 மாதங்களாக திக்கணங்கோடு கால்வாய் வழியாக திறக்கப்பட்டும், செம்பொன்விளை, ஒலக்கோடு, முக்காடு, கறுக்கன்குழி, தாறறாவிளை ஆகிய ஊா்களுக்கு தண்ணீா் வரும் கால்வாயில் குப்பையும், முள்புதற்களும் மண்டியுள்ளன. இதனால் ஊா் மக்களுக்கு நிலத்தடி நீா் குறைந்து குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் கால்வாயின் கரைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், கால்வாயின் அகலம் குறைந்து காணப்படுகிறது. எனவே, கால்வாயைத் தூா்வாரி, ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com