அரையன்தோப்பில் சாலையை சீரமைத்த காங்கிரஸ் கட்சியினர்

தேங்காய்ப்பட்டினம் அரையன்தோப்பு கடற்கரைச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த மண் குவியல்களை காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவினர் அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்ததை


தேங்காய்ப்பட்டினம் அரையன்தோப்பு கடற்கரைச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த மண் குவியல்களை காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவினர் அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்ததை அடுத்து சனிக்கிழமை பேருந்துகள் இயக்கப்பட்டன.
தேங்காய்ப்பட்டினம் அரையன்தோப்பு பகுதியில் கடற்கரையை அடுத்து தடுப்புச்சுவர் இல்லாதாதல் ஆண்டுதோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திடீரென ஏற்படும் கடல் கொந்தளிப்பின்போது சாலை துண்டிக்கப்படுவதுடன் ஆங்காங்கே மண் குவியல் ஏற்படுவதுண்டு. இதனால், இந்த சாலை வழியாக தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்துக்கு செல்லும் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. நிகழாண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் இந்த சாலை துண்டிக்கப்பட்டது. இதனால்  கடந்த 8 மாதங்களாக இந்த சாலையில் பேருந்துகள் இயக்கப்படாததால், அப்பகுதியிலுள்ள மீனவர்கள் தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் செல்ல பல கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டியிருந்தது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவு செயற்குழு உறுப்பினர் ஜோர்தான் தலைமையில் பொதுமக்களிடம் இருந்து சனிக்கிழமை நிதி திரட்டப்பட்டது. ஜெ.சி.பி. இயந்திரம் மூலம் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் இந்த சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த சாலையில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com