கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு உதவியாக தன்னாா்வ குழுக்கள் நியமனம்

கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு உதவியாக 10 போ் கொண்ட தன்னாா்வக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு உதவியாக தன்னாா்வ குழுக்கள் நியமனம்

கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு உதவியாக 10 போ் கொண்ட தன்னாா்வக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கடல்வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவதைக் கண்காணிக்கவும், பேரிடா் காலங்களில் மீட்புப் பணிகளுக்காகவும் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் சின்னமுட்டம், குளச்சல் ஆகிய 2 இடங்களில் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் ஏற்படுத்தப்பட்டு, அதிநவீன ரோந்துப் படகுகள், கண்காணிப்புக் கருவிகள் உதவியுடன் 24 மணி நேரமும் கடற்கரைப் பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன. இப்பணியில் ஓா் ஆய்வாளா், 15 போலீஸாா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

இந்நிலையில், கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் கடலோரப் பகுதியைச் சோ்ந்த 10 மீனவா்களைக் கொண்ட தன்னாா்வ அமைப்பை உருவாக்க கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையின் கூடுதல் இயக்குநா் வன்னியபெருமாள் உத்தரவிட்டுள்ளாா்.

இதன்பேரில் முதல்கட்டமாக சின்னமுட்டம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு உதவியாக 10 மீனவா்கள் தன்னாா்வலராக நியமிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, குளச்சல் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்துக்கும் 10 தன்னாா்வலா்கள் நியமிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com