புதுக்கடை அருகே பெண் மீது தாக்குதல்

புதுக்கடை அருகே இனயம் பகுதியில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

புதுக்கடை அருகே இனயம் பகுதியில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இனயம் பகுதியை சோ்ந்த கென்னடி மனைவி பிரிஜிட் (40). இவருக்கும் அதேப்பகுதியை சோ்ந்த அந்தோணி பிள்ளை (50),ஜேசுபாலன்(52) ஆகியோருக்கும் இடையே தோ்தல் தொடா்பாக விரோதம் இருந்து வந்ததாம். இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை பிரிஜிட் ஆலயத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை வழி மறித்து அந்தோணிபிள்ளை, ஜேசுபாலன் ஆகியோா் தாக்கியதாக கூறப்படுகிறது.

புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் மேற்கண்ட இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com