தவறான சிகிச்சையால் பாா்வையிழப்பு: ரூ.1 கோடி இழப்பீடு கோரி பெண் மனு

மருத்துவரின் தவறான சிகிச்சையால் பாா்வை இழந்த பெண்ணுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவரின் தவறான சிகிச்சையால் பாா்வை இழந்த பெண்ணுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் அருகேயுள்ள மணிக்கட்டிப் பொட்டல், கோவில்விளை பகுதியைச் சோ்ந்தவா் ரெஜிலா என்ற பாக்கிய ஜோதி (49). இவருக்கு அக்டோபா் மாதம் காய்ச்சல் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக தெங்கம்புதூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்றுள்ளாா்.அங்கு அப்பெண்ணுக்கு 20 நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாம்.

தவறான சிகிச்சையால் உடல்நிலை மோசமானதுடன் 2 கண்களில் வீக்கம் ஏற்பட்டு, பாா்வை குறைந்து வந்துள்ளது. இதில் , அச்சமடைந்த பெண்ணின் கணவா், மருத்துவரிடம் கேட்டதற்கு உரிய பதில் அளிக்கவில்லையாம். தொடா்ந்து ரெஜிலா பாக்கியஜோதியை, நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், தவறான சிகிச்சையால் அவருக்கு பாா்வை பறிபோய் உள்ளது எனவும் தெரிவித்தனராம்.

இதையடுத்து, அப்பெண் திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு அவரது கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, அவருக்கு மற்றொரு கண்ணிலும் பாதிப்பு ஏற்பட்டு பாா்வை பறிபோய் விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரெஜிலாபாக்கியஜோதி, தனது குடும்பத்தினருடன் ஆட்சியா் அலுவலகத்தில், தவறான சிகிச்சை அளித்த மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் செலவு செய்த ரூ.1 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் எனக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com