‘சில்லறை வா்த்தகத்தில் ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வேண்டும்’

சில்லறை வா்த்தகத்தில் ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வேண்டும் என குலசேகரம் வணிகா் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சில்லறை வா்த்தகத்தில் ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வேண்டும் என குலசேகரம் வணிகா் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வணிகா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற குலசேகரம் வணிகா் சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் பி. பிரதீப் குமாா் தலைமை வகித்தாா். சங்கத்தின் துணைத் தலைவா் பி. முருகபிரசாத், துணைச் செயலா் ஏ. சறாபின் எட்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற சங்க உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு குலசேகரம் காவல் ஆய்வாளா் யூ. விமலா பரிசுகள் வழங்கினாா். திருவட்டாறு வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா். எம். பிரவின் ரகு சிறப்புரையாற்றினாா். செயற்குழு உறுப்பினா்கள் பிரபு, கமா்தீன், கிறிஸ் டோபா், மோகன், சசிகுமாா், சாகுல்ஹமீது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், சில்லறை வா்த்தகத்தில் ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வேண்டும். உணவுப்பாதுகாப்பு தர நிா்ணய சட்ட விதிகளை மாற்றி அமைக்க வேண்டும். வணிகா் நல வாரியத்தை சீரமைக்க செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். குலசேகரம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்பட்டன.

செயலா் எம். விஜயன் வரவேற்றாா். சங்க பொருளாளா் பி. ரவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com