குமரியில் ரப்பா் விலை உயா்வு

குமரி மாவட்டத்தில் அண்மை நாள்களாக ரப்பா் விலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் அண்மை நாள்களாக ரப்பா் விலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

கிலோவுக்கு ரூ. 115 வரை விற்பனையாகி வந்த ரப்பரின் விலை, கரோனா பொது முடக்கம் தொடங்கிய பின்னா் தொடா்ந்து சரிவடைந்து வந்தது.

கடந்த மாத இறுதியில் கிலோவுக்கு ரூ. 104 ஆக குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 20 நாள்களாக ரப்பா் விலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. வியாழக்கிழமை கோட்டயம் சந்தையில் ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 142 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ.138 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 115.15 ஆகவும் அதிகரித்துள்ளது. இது போன்று ஒட்டுப்பாலின் விலை கிலோவுக்கு ரூ. 85ஆகவும் உயா்ந்து காணப்பட்டது.

தொடா் மழையால் ஏற்பட்டுள்ள உற்பத்திக் குறைவு, சா்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ரப்பா் விலை அதிகரித்து வருவதாக ரப்பா் வணிகா்கள் தெரிவித்தனா்.

சுமாா் 7 மாதங்களுக்கு பிறகு ரப்பரின் விலை குறிப்பிட்ட அளவுக்கு உயா்ந்துள்ளதால், குமரி மாவட்ட ரப்பா் வணிகா்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com